வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகளவிலான பொறிவெடிகள் மற்றும் கண்ணிகள் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன
அனுராதபுரம், திறப்பனை வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிக்கு வெளியில் வரலாற்றிலேயே அதிகளவிலான பொறிவெடிகள் (Trap Guns) மற்றும் கண்ணிகள் (Snares) ஆகியவற்றை திறப்பனை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, திறப்பனை உட்டிமடுவ - பல்லன்குலம குளத்திற்கு அருகில் செயற்பாட்டு நிலையில் இருந்த 21 பொறிவெடிகள் மற்றும் 120 கண்ணிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகள் பரந்த தேடுதல் வேட்டையை நடத்தி அந்தப் பொறிகளை செயலிழக்கச் செய்து அகற்றியுள்ளனர். அண்மைக் காலமாக இப்பகுதியில் காட்டு யானைகள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களுடன் நாளை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.