நடப்பு சாம்பியனான இந்தியா குரூப் ஏ பிரிவில்முதலிடத்தில்உள்ளது. நெட் ரன் ரேட்(NRR) அடிப்படையில்பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் நாளை கொழும்பில் நடக்கும் ஆட்டத்தில் பரம எதிரிகளாக இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தனியாக எந்த தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர்
