'ஹேஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

 கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



 

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோணஹேன விசேட படைப்பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 300 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர்  முன்னெடுத்து வருகின்றனர்.