இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
மேலும், மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தக் கூட்டணி தொடரவில்லை எனக் கூறப்படும் நிலையில், தற்போது ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, இப்படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.