தீபாவளிப் பண்டிகைக்கு கடைகளில் வாங்காமல், வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் மைசூர் பாக்கை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 1½ முதல் 2 கப்
நெய் – 1 கப்
தண்ணீர் – ½ கப்
செய்முறை
கடலை மாவைச் சலித்து, பாதி நெய் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
அதில் கடலை மாவுக் கலவையைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
மீதமுள்ள நெய்யை மூன்று தடவைகளாகச் சேர்த்து கலவை திரண்டு வரும் வரை கிளறவும்.
நெய் தடவிய தட்டில் ஊற்றி 15 நிமிடங்கள் ஆறவிட்டு துண்டுகளாக வெட்டவும்.