ஞானசார தேரரின் விடுதலைக்கான கோரிக்கை! 9 நாட்களாக நீடிக்கும் சத்தியாகிரகம்

 




சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (24) ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

பௌத்த பிக்குமார் தலைமையிலான குழுவினரால் கடந்த 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், தொடர்ந்தும் விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் குறித்த பூங்கா வளாகத்திலேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்பது நாட்களாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.