ஹபராதுவையில் பஸ் மீது புகையிரதம் மோதியது: 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி



ஹபராதுவை பகுதியில் பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொக்கல மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.