திருகோணமலை 4ஆம் கட்டையில் அதிர்ச்சி ! விடுதி உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை

 



திருகோணமலை, 4ஆம் கட்டை சந்திப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (20) இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், குறித்த நபர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர் திருகோணமலை, சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை இடம்பெற்றபோது அவர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அடையாளம் தெரியாத நபர் அல்லது குழுவினரால் இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகத் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.