ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கான பாதைகளை அமைப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான கூட்டு யோசனையொன்றை சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
பிராந்திய அமைதி மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையின் மூலம் ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதுடன், சர்வதேச வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிராந்திய கடல்சார் போக்குவரத்தின் சீரான இயக்கம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
