உலக மதுவிலக்கு தினம்: இன்று நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்

 



உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று (ஒக்டோபர் 3) இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மதுபானப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக, சுகாதார ரீதியான தீமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது முழுமையாகத் தவிர்ப்பதையோ ஊக்குவிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதனையொட்டி, இன்று நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் செயல்படாது என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.