நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

 



இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.