உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலை உயர்வு, நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
