மாத்தறை – தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பல மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் இலங்கை கடலோர காவற்படையினரும் இணைந்து இன்று (24) காலை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இந்த மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மூடைகளில் போதைப்பொருள் உள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் போதைப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதன் வகை மற்றும் மொத்த எடை தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
