குடாவெல்லயில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்

 



மாத்தறை, குடாவெல்ல பகுதியில் இருந்து நான்கு மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன படகையும் அதில் பயணித்த நான்கு மீனவர்களையும் கண்டறியும் நோக்கில், இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காணாமல் போன மீனவர்களின் நிலை குறித்து இதுவரை மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர்களையும் படகையும் விரைவாகக் கண்டறிவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.