ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினமும் அவரைச் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நவம்பர் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
