தந்தம் கொண்ட ‘காவன்திஸ்ஸ’ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 12-போர் ரகத் துப்பாக்கி ஒன்று, கேப் துப்பாக்கி ஒன்று மற்றும் 24 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த நபர் இதற்கு முன்னரும் ‘டயானா’ என அழைக்கப்படும் மற்றொரு தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
.jpg)