ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பை வந்தடையும் நடைபயணப் பேரணி...

 



கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்திற்கான நடைபயணப் பேரணி’ இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது.

கடந்த 10ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்த நடைபயணப் பேரணி, கடுகன்னாவ, கேகாலை, வரக்காபொல மற்றும் நிட்டம்புவ ஆகிய நகரங்களைக் கடந்து நேற்று (14) கடவத்தை நகரைச் சென்றடைந்தது.

இதனையடுத்து, இன்று காலை கடவத்தை நகரிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணப் பேரணி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்தப் பேரணி, கொழும்பைச் சென்றடைந்ததும் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.