ஒரே இலக்கத் தகடுகளைக் கொண்ட இரண்டு முச்சக்கரவண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் குறித்த முச்சக்கரவண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளில் ஒன்று வாடகை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், மற்றைய முச்சக்கரவண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முச்சக்கரவண்டிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
