அனுராதபுரம், திறப்பனை நாச்சதூவ வாவிக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ‘அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் இலங்கை இராணுவமும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்போ யானை கண்டுபிடிக்கப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டதாக, குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான வனவிலங்கு உதவி அதிகாரி புத்திக உறுதிப்படுத்தியுள்ளார்.
யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
.jpg)