மின்சார வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான e-Revenue Licence (மின்னணு வருமான அனுமதிப் பத்திரம்) சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் பணிகள் காரணமாக, நாட்டின் 8 மாகாணங்களில் இந்தச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, செப்டம்பர் 25ஆம் திகதி முதல் செப்டம்பர் 28ஆம் திகதி வரை e-Revenue Licence சேவை தற்காலிகமாக இயங்காது.
இதன்படி, மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 8 மாகாணங்களில் இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் உயர்தரமான மின்னணு சேவையை வழங்கும் நோக்கில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர், செப்டம்பர் 29ஆம் திகதி முதல் e-Revenue Licence சேவையை வழமைபோல் பெற்றுக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
