சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவனுக்கு சித்திரவதை – இருவர் கைது!!

 


கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்தின் காப்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவனை சந்தேகநபர்கள் துன்புறுத்தியுள்ளதாகவும், அவரது அந்தரங்கப் பகுதியில் மிளகாய்த் தூள் தூவி சித்திரவதை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் முதலில் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.