இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,356 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பதிவுகளில் 21.27 சதவீதமாகும்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,412 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,212 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,178 பேரும் டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.