மதுரையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபலமான ஜிகர்தண்டா கடை ஒன்றிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென சென்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஜிகர்தண்டா சாப்பிட வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் அவரைச் சுற்றி திரண்டுள்ளனர்.
அப்போது ரசிகர்களுடன் மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் சிவகார்த்திகேயன் உரையாடியுள்ளார். மேலும், அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்டதுடன், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் ஜிகர்தண்டாவையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மதுரை மக்களுடன் இயல்பாகப் பழகி, அவர்களுடன் ஜிகர்தண்டா பருகிய சிவகார்த்திகேயனின் இந்த அன்பான தருணங்கள் காணொளியாக பதிவாகியுள்ளன.
இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் எளிமையான அணுகுமுறையையும் அன்பான செயலையும் பாராட்டி மதுரை மக்கள் மற்றும் இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.