இந்த மாணவர் தெரிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மேற்கொண்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக தகவல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு தொடர்பான தகவல்களை உரிய முறையில் சரிபார்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.