முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று (10) முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை 9.30 மணிக்கு குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த கொள்வனவு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் முன்னாள் விமானப்படை தளபதி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.