2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை Telegraphic Transfer (T/T) முறை மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் அடிப்படையில், 2023–2025 காலப்பகுதியில் பெருமளவிலான அமெரிக்க டொலர் பணம் T/T முறை மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.