நண்பர்களுடன் Weekend-ஐ சிறப்பாக கொண்டாட TikTok தரும் புதிய ஐடியாக்கள்


நீண்ட வார இறுதி விடுமுறைகள் நண்பர்களுடன் வழக்கமான சந்திப்புகளைத் தாண்டி, புதுமையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகின்றன.

புதிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வரும் உணவு வகைகளை முயற்சிப்பது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது அல்லது நண்பர்களுடன் இணைந்து வெளியில் நேரத்தை செலவிடுவது என பல்வேறு செயல்பாடுகளுக்கான புதிய யோசனைகளை TikTok வழங்கி வருகிறது.

உலகளவில் பிரபலமாகும் ட்ரெண்ட்கள் முதல் இலங்கையின் உள்ளூர் படைப்பாளர்களால் உருவாக்கப்படும் காணொளிகள் வரை பல்வேறு உள்ளடக்கங்களை TikTok கொண்டுள்ளது. இதன் மூலம் நண்பர்களுடன் எங்கு செல்லலாம், என்ன செய்யலாம் என்பதற்கான புதிய யோசனைகளைப் பெற முடிகிறது.

TikTok-இல் பிரபலமாகும் சில ட்ரெண்ட்கள் குறுகிய காலத்தில் மறைந்துவிட்டாலும், அவற்றை நண்பர்களுடன் இணைந்து முயற்சிப்பதன் மூலம் உருவாகும் நினைவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

நண்பர்களுடன் எடுத்த பழைய புகைப்படங்களை அதே கோணத்தில் மீண்டும் எடுத்துப் பார்ப்பது, Get Ready With Me (GRWM) காணொளிகளை உருவாக்குவது அல்லது அன்றாட அனுபவங்களைப் பதிவு செய்யும் Vlogகளை உருவாக்குவது போன்ற பல்வேறு வழிகளில் நட்பின் அழகான தருணங்களைப் பதிவு செய்யலாம். இதற்காக #FriendTok, #BestFriends மற்றும் #BestieGRWM போன்ற Hashtags மூலம் மேலும் பல யோசனைகளைப் பெறலாம்.

நண்பர்களுடன் Food Tour

நண்பர்களுடன் மறக்க முடியாத உணவுப் பயணத்தைத் திட்டமிடுவதற்கும் TikTok உதவியாக இருக்கிறது. வழக்கமாகச் செல்லும் உணவகங்களைத் தவிர்த்து, உள்ளூர் படைப்பாளர்களால் பரிந்துரைக்கப்படும் புதிய உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் இனிப்பகங்களை கண்டறிந்து செல்லலாம்.

கொழும்பு, காலி, கண்டி மற்றும் எல்லே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதிய உணவு அனுபவங்களையும் மறைக்கப்பட்ட இடங்களையும் கண்டறிய #SriLankaCafe, #ColomboFood, #GalleFood மற்றும் #ExploreSriLanka போன்ற Hashtags உதவுகின்றன.

 புதிய இடங்களை ஆராயுங்கள்

வழக்கமான சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அப்பால், அங்கு சென்று அனுபவித்தவர்களின் நேரடி காணொளிகள் மூலம் புதிய இடங்களை அறிந்து கொள்வதும் TikTok-இன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அழகிய மலைப்பகுதிகள், இயற்கை நீர்வீழ்ச்சிகள், அமைதியான கடற்கரைகள், அழகிய புத்தகக் கடைகள் என பல்வேறு இடங்களை TikTok மூலம் கண்டறியலாம்.

#TravelTok மற்றும் #HiddenGemSriLanka போன்ற Hashtags-ஐ பயன்படுத்தி, இதுவரை சென்றிராத ஓர் இடத்தைத் தேர்வு செய்து, நண்பர்களுடன் முழுநாள் சுற்றுலாவைத் திட்டமிடலாம்.

இந்த நீண்ட வார இறுதியில் வெறுமனே TikTok காணொளிகளைப் பார்த்து ரசிப்பதற்குப் பதிலாக, அதில் கிடைக்கும் யோசனைகளை நிஜ வாழ்க்கை அனுபவங்களாக மாற்றி, நண்பர்களுடன் மறக்க முடியாத தருணங்களை உருவாக்கலாம்.