நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனுடன், ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு பயணத் தடையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.jpg)