சீரற்ற வானிலையால் நிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!!

 சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.