இந்த மாவட்டங்களுக்குட்பட்ட 23 பிரதேச செயலகப் பிரிவுகள் தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ தாக்கம் காரணமாக இதுவரை 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான குடிநீர் விநியோகம் மொனராகலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,523 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
.jpeg)