கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மட்டம் குறைப்பு.....

 


மண்சரிவு அபாய எச்சரிக்கையில் மாற்றம் – சிவப்பு எச்சரிக்கை நீக்கம்

தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழையினால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய அறிவிப்பின்படி, மண்சரிவு முன்னெச்சரிக்கை இன்று (05) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 – “அவதானமாக இருங்கள்”

கண்டி மாவட்டம்:
உடபலாத, தொழுவை, மெததும்பர, தெல்தோட்டை, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை மற்றும் உடுதும்பர.

கேகாலை மாவட்டம்:
அரநாயக்க, தெரணியகல, புலத்கோஹுபிட்டிய, தெஹிஓவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை.

நுவரெலியா மாவட்டம்:
நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வுட் மற்றும் தலவாக்கலை.

இரத்தினபுரி மாவட்டம்:
ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.

எச்சரிக்கை மட்டம் 1 – “விழிப்பாக இருங்கள்”

கேகாலை மாவட்டம்: கேகாலை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த.

இரத்தினபுரி மாவட்டம்: நிவிதிகல மற்றும் குருவிட்டை.

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் ஏற்படும் பிளவுகள், திடீர் நீர் ஓட்டங்கள் உள்ளிட்ட மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.