அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 1,498,749 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 36,590 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இது ஒகஸ்ட் 1 முதல் 23ஆம் திகதி வரையான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 24 சதவீதமாகும்.
இதனிடையே, 16,688 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும், 10,294 வருகைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
2026 ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 23 வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 374,820 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதேவேளை, பிரித்தானியாவில் இருந்து 147,089 பேரும், சீனாவில் இருந்து 98,801 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்மூலம், 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலாத்துறையில் இந்தியா, பிரித்தானியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து முக்கிய சுற்றுலாச் சந்தைகளாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
