ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்பட்டு வரும் சுரன்ஜித் வேவிட்ட, வங்கியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராகத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில்முனைவோராக மதிப்பீடு செய்யப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான இவர், உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அனுபவம் பெற்றவராக உள்ளார்.
இதனிடையே, SLTDA தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களை முன்னிட்டு நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்துமூலம் சமர்ப்பித்திருந்த நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சுரன்ஜித் வேவிட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
