செம்மணி மனித புதைகுழியில் மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்.

 செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு 



தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆம் நாள் பணிகள் நேற்று (11) யாழ்ப்பாணம் நீதவான் செ. லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன.

இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 524 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகளின்போது 516ஆம் இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் இடுப்புப் பகுதியில் தாயத்து போன்ற பொருளொன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதனுடன், மேலும் சில சான்றுப் பொருட்களும் அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.