இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமிட்புர சது’ – CCD விசாரணை ஆரம்பம்!!




 ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமிட்புர சது’ என அழைக்கப்படும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ‘மோதரை சது’ அல்லது ‘சமிட்புர சது’ என அழைக்கப்படும் இவர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முக்கியமாகத் தேடப்பட்டு வந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.