விக்ரம் மிஸ்ரி – சஜித் பிரேமதாச சந்திப்பு.

 


இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர் நேற்று (05) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய அபிவிருத்தி மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான இராஜதந்திர தொடர்புகளும் நெருக்கமான ஒத்துழைப்பும் அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.

அத்துடன், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்ப முன்னேற்றம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.