கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 5ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பான குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டதுடன், பல கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கைதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
