கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தலகல ஓயாவிற்குள் கவிழ்வு.

 


நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தனியார் பேருந்தொன்று தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா கிரெகரி ஏரியை அண்மித்த பகுதியில் இன்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கிப் பயணித்த குறித்த தனியார் பேருந்தை நிறுத்துவதற்கு சாரதி முயற்சித்த போது, அது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகிய இருவர் மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.