அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு சாதாரண கார்ட்டூனிஸ்ட் எதிர்பாராத விபத்துக்குப் பின்னர் தனக்கு மட்டும் கேட்கும் மர்மமான குரலின் உதவியுடன் எப்படி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற வித்தியாசமான கற்பனைக்கதையுடன், சமூக கருத்துகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சரிதா, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த அசரீரி குரலுக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்தது திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது.
‘மாவீரன்’ திரைப்படம் வெற்றி பெற்றதிலிருந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ‘மாவீரன் 2’ படத்திற்கான கதையை இயக்குநர் மடோன் அஸ்வின் உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 2028 ஆம் ஆண்டு ஆரம்பிக்கலாம் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ‘மாவீரன் 2’ திரைப்படத்தில் மீண்டும் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpeg)