இதன்படி, நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தின் வழக்கமான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், சில மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் பரீட்சைகளில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், விரிவுரைகளை இணையவழி மூலம் தொடர்ந்து நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ள மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
