பரீட்சைகள் திணைக்களம், 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பரீட்சை ஏப்ரல் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
