திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்பு – நடிகர் ராகவா லாரன்ஸ் களமிறங்க வாய்ப்பு.

 


திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், மக்களிடையே நல்ல பெயரும் சமூக சேவை பணிகளால் தனித்த இடமும் பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸை களமிறக்குவது தவெக தலைமையின் முக்கிய திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல சமூக நல உதவிகளில் ஈடுபட்டு வருவதால், அவர் அரசியலுக்கு வந்தால் மக்களின் ஆதரவு அதிகமாக கிடைக்கும் என கட்சித் தரப்பில் கணக்கிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அரசியல் நுழைவு குறித்து அவர் தனது குருநாதர் ரஜினிகாந்திடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தவெகவின் “நேர்மையான ஆட்சி” என்ற இலக்குடன் பொருந்தும் நபராக லாரன்ஸ் பார்க்கப்படுவதால், இந்த முடிவு தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.