பிரண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.45% உயர்ந்து 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேபோல், WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.41% உயர்ந்து 93.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான் இஸ்ரேல் மீது நேற்று தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் மேற்கொண்டது. இதனால் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த அச்சநிலை காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு தொடர்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
.jpeg)