திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்க நிதிகள் பற்றிய குழு (COPF) இன்று (08) பிற்பகல் கூடவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திறைசேரி தயாரித்துள்ள விசாரணை அறிக்கைக்கு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpeg)