அசைவ உணவுகளில் சிக்கன் பெரும்பாலானோரின் விருப்பமானதாக உள்ளது. அதன் சுவை மற்றும் புரதச்சத்து காரணமாக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிக்கன் உணவுகளை உட்கொள்வது வழக்கமாக உள்ளது. இருப்பினும், கோழியின் சில பகுதிகளை தவிர்ப்பது உடல்நலத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கோழியின் சில பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் ரசாயனங்கள் அதிகமாகக் காணப்படலாம். அவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் அல்லது அதிகமாக உட்கொண்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, கோழியின் நுரையீரல் பகுதியில் அதிக வெப்பத்திலும் அழியாத பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என்பதால் அதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், கோழியின் இரைப்பை பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால் செரிமான பிரச்சனைகள் மற்றும் உணவு நஞ்சாதல் ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
கோழித் தலை பகுதிகளில் வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் மருந்து எச்சங்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்பு இருப்பதால், அவை நீண்ட காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பிற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், கோழித் தோலில் அதிக கொழுப்பு இருப்பதால் இதய நோய், உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. கோழியின் வால் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் கழிவுகள் காரணமாக கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
.jpeg)