ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் K1 மற்றும் பயோடின் போன்ற முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், கண் பார்வையை மேம்படுத்துதல், ஆற்றலை அதிகரித்தல் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
கரட்டை பச்சையாக சாப்பிடலாமா அல்லது ஜூஸ் ஆக குடிக்கலாமா என்பது பலருக்கு உள்ள சந்தேகமாகும். இரண்டுக்கும் தனித்தனியான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பச்சை கரட் சாப்பிடுவதால் உடலுக்கு நார்ச்சத்து அதிகமாக கிடைக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின் A தைராய்டு செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
மறுபுறம், கரட் ஜூஸில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் A அதிக அளவில் கிடைக்கிறது. இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் அதிக அளவில் கரட் ஜூஸ் குடிப்பது கரோட்டினீமியா என்ற நிலையை ஏற்படுத்தி தோல் மஞ்சள் நிறமாக மாறக்கூடும் என்பதால் அளவோடு பயன்படுத்துவது முக்கியம்.
மொத்தத்தில், கரட்டை பச்சையாகவும், ஜூஸாகவும் சமநிலையுடன் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும்.
.jpeg)