வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்.



 தென் அமெரிக்க நாடான Venezuela நேற்று (26) வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையமாக தலைநகர் Caracas நகரிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள La Guaira பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிர்வுகள் தலைநகர் உள்பட நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின.

அதிகாரிகள் தெரிவித்ததன்படி, Simón Bolívar International Airport (மைகுயெட்டியா விமான நிலையம்) சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் பிளந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் இடிபாடுகளாக மாறியுள்ள நிலையில், மக்கள் பெரும் அச்சத்தில் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச உதவிகளும் விரைவாக களமிறங்கியுள்ளன. அமெரிக்கா, பிரேசில், கியூபா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட நாடுகள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றன.

இதுவரை அதிகாரப்பூர்வமாக 235 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

அதிகாரிகள் மற்றும் புவியியல் நிபுணர்கள் கருத்துப்படி, இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.