இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து அரசாங்கம் மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்புகளில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் திறந்த கடல்சார் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளும் இந்த விஜயத்தின் போது ஆராயப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
.jpeg)