பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், சம்பவம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் விளக்கங்கள் விரிவாக ஆராயப்படவுள்ளன.
இதற்காக திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சும் மத்திய வங்கியும் தனித்தனியாக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நிதி அமைச்சு ஒரு வாரத்திற்கு முன்னரும், மத்திய வங்கி சில நாட்களுக்கு முன்னரும் தங்களது அறிக்கைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில், அறிக்கைகளில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் குறித்த நிதி பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
.jpeg)