இலங்கை பாராளுமன்ற இன்றைய நடவடிக்கைகள் அறிவிப்பு.

 


பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய தினத்துக்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையான விதிகளின் கீழ் அலுவல்கள் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெறும்.

முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை, ஆளும் கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.